ஈரோட்டில் போலீஸ் எஸ்.ஐ., தேர்வு; ஏற்பாடுகள் தீவிரம்

ஈரோட்டில் போலீஸ் எஸ்.ஐ., தேர்வு; ஏற்பாடுகள் தீவிரம்
X

erode local news- ஈரோட்டில், நாளை போலீஸ் எஸ்.ஐ., தேர்வு நடக்கிறது. (கோப்பு படம்)

erode local news- ஈரோட்டில், நாளை இரண்டு மையங்களில் போலீஸ் எஸ்.ஐ.,க்கான எழுத்துத் தேர்வு நடக்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

erode local news- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) மற்றும் ஸ்டேஷன் அதிகாரி ஆகிய காலிப்பணியிடத்திற்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் நாளை (26-ம் தேதி), நாளைய மறுதினம் (27-ம் தேதி) ஆகிய 2 நாட்கள் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவு சீட்டும் அவர்கள் விண்ணப்பித்த இணைய தளம் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை நடக்கும் சப்- இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வுக்காக ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கலை கல்லூரி, வேளாளர் இன்ஜினியரிங் கல்லூரி ஆகிய 2 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வினை 3,567 பேர் எழுத உள்ளனர். தேர்வானது, காலை 10 மணி க்கு தொடங்கி பகல் 12.30 மணி வரை பொது அறிவு தேர்வும், மதியம் 3.30 மணி முதல் 5.10 மணி வரை மொழி திறனறி தேர்வும் நடக்கிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது,

ஈரோட்டில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடக்கும் 2 மையங்களில் 300 போலீசாரும், தேர்வு மையத்துக்கு வெளியே 100 போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். தேர்வர்கள் காலை 8 மணி முதல் தேர்வு மையத்துக்குள் வர அனுமதிக்கப்படுவர். பிரஸ்கிங் முறையில் சோதனை செய்யப்பட்ட பின் தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

செல்போன், பேக், பர்ஸ், கால்குலேட்டர், புளு டூத், டிஜிட்டல் மற்றும் எலக்ட்ரானிக் வாட்ச் போன்ற எவ்வித எலக்ட்ரானிக் பொருட்கள், விலை உயர்ந்த பொருட்கள் தேர்வு மையத்திற்குள் எடுத்து வர அனுமதி இல்லை. தேர்வு மையத்தின் முன்புறம் உள்ள பாதுகாப்பு அறையில் தாங்கள் எடுத்து வரும் பொருட்களை வைத்துவிட்டு, எழுதுபொருள் மற்றும் நுழைவு சீட்டினை மட்டும் தேர்வு மையத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings