விசாரணையில் 21 பவுன் நகை மீட்பு

விசாரணையில் 21 பவுன் நகை மீட்பு
X
போலீசாரின் அதிரடி விசாரணையினால், திருட்டு வழக்கில் கைதானவரிடமிருந்து 21 பவுன் நகை மீட்கப்பட்டது

போலீசார் கஸ்டடி விசாரணையில் 21 பவுன் நகை மீட்பு

ஈரோடு: சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த மணி (எ) தங்கமணி (25) என்பவர், 2023 ஏப்ரல் மாதம் வீரப்பன்சத்திரம் போலீஸ் எல்லைக்குள் உள்ள இரண்டு வீடுகளில் நகை மற்றும் பணம் திருடியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வந்தனர்.

இந்த சூழலில், வேறு ஒரு திருட்டு வழக்கில் சேலம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஏழு நாட்கள் கஸ்டடியில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 21 பவுன் நகை மீட்கப்பட்டது.

பின்னர், தங்கமணியை ஈரோடு முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story