சந்தன மரம் வெட்ட சென்றவர் மாயம்

சந்தன மரம் வெட்ட சென்றவர் மாயம்
X
அந்தியூரில், சந்தன மரம் வெட்டச் சென்றவர் வீடு திரும்பாததால் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

சந்தன மரம் வெட்ட சென்றவரின் மர்மமான மரணம்

அந்தியூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சின்னக்குத்தியை சேர்ந்த சக்திவேல் (25), வெங்கடேஷ், ராஜேந்திரன், மற்றும் குமார் ஆகியோர், ஐந்து நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் பர்கூர்மலையில் உள்ள தட்டக்கரை வனச்சரகம், போதமலை எம்மம்பட்டி பகுதியில் சந்தன மரம் வெட்டச் சென்றுள்ளனர்.

மரம் வெட்டும் போது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதால், பயந்த அவர்கள் வெவ்வேறு திசையில் தப்பியோடினர். ஆனால், சக்திவேல் வீடு திரும்பவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு, சக்திவேலை தேடி பர்கூர் சென்ற வெங்கடேஷ் மற்றும் ராஜேந்திரன், அங்கு விசாரணை நடத்தினர். ஆனால், அவருக்கு என்ன நேர்ந்தது? யார் காரணம்? – இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story