மளிகை கடைக்காரரை பணம் கேட்டு மிரட்டிய ஆறு பேர்

வடமாநில மளிகை கடைக்காரரை பணம் கேட்டு மிரட்டிய ஆறு பேர் கைது
ஈரோடு மாவட்டம், கிழக்கு கொங்காலம்மன் கோவில் வீதியில் ரகுவர்சிங் என்பவர் மகா சிவசக்தி ஸ்டோர்ஸ் என்ற மளிகை கடையை நடத்தி வருகிறார். நேற்று, வீரப்பன்சத்திரம் பாரதி நகரை சேர்ந்த புதிய இந்தியா பத்திரிக்கை நிருபர் கோகுல்ராஜ் (29) மற்றும் இருவர், அவரது கடையின் முன்புறம் அமர்ந்திருந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சில நேரம் கழித்து, ரகுவர்சிங்கின் மொபைல் எண் கேட்டுக் கொண்டு சென்றனர்.
அதன்பிறகு, அரசால் தடை செய்யப்பட்ட கூல் லீப் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறி, இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமல் இருக்க, அவரிடம் பணம் கேட்டுள்ளனர். தொடர் அழைப்புகளின் மூலம் மிரட்டல் விடுத்ததோடு, நேரில் வந்து கடையில் தகராறும் செய்தனர். இந்த சம்பவம் குறித்து ரகுவர்சிங், ஈரோடு டவுன் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று கோகுல்ராஜ் மற்றும் மற்ற ஐந்து பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பி.பெ.அக்ரஹாரம் அய்யாதுரை வீதி ஆட்டோ டிரைவர் சாதிக் (30), மேஸ்திரி சந்தை சேர்ந்த கார்மெண்ட்ஸ் தொழிலாளி தினகரன் (34), மூலப்பாளையம் பாரதி நகர் கார் டிரைவர் காஜாமைதீன் (33), பி.பெ.அக்ரஹாரம் அன்னை சத்யா நகர் பெயிண்டர் வெங்கடேஷ் (29) மற்றும் தனுஷ்ராஜ் (20) ஆகியோர் அடங்குகின்றனர்.
சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu