பராமரிப்பின்றி ஏரி சிறுவர் பூங்கா, சிறுவர்கள் ஏமாற்றம்

பராமரிப்பின்றி ஏரி சிறுவர் பூங்கா, சிறுவர்கள் ஏமாற்றம்
X
கோபி ஏரி, ரூ. 2.28 கோடி செலவில் கட்டப்பட்ட பூங்கா, பராமரிப்பு இல்லாமல் மோசம்

பராமரிப்பின்றி சீரழிந்த செங்குட்டை ஏரி சிறுவர் பூங்கா

கோபி, வேட்டைக்காரன்கோவில் அருகே இந்திரா நகரில் அமைந்துள்ள செங்குட்டை ஏரியின் சுற்றுச்சூழலை 2.28 கோடி ரூபாயில் மறுசீரமைப்பு செய்தனர். இதனுடன் பல்வேறு நிதிகளைக் கொண்டு சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லமும் அமைக்கப்பட்டது. இந்தப் பூங்கா தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கிறது.

படகு இல்லத்துடன் கூடிய சிறுவர் பூங்காவில் நுழைய சிறியவர்களுக்கு ஐந்து ரூபாயும், பெரியவர்களுக்குப் பத்து ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அங்குள்ள ஏரியில் இயந்திரப் படகில் சவாரி செய்ய சிறுவர்களுக்கு 25 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கூடுதலாக கால்மிதி படகில் நான்கு பேர் பயணிக்க 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

இருப்பினும், பூங்கா பயன்பாட்டில் இருந்தாலும் போதிய பராமரிப்பின்றி படுமோசமாகக் காட்சியளிக்கிறது. சிறுவர்கள் பயன்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் உடைந்தும், சேதமடைந்தும் உள்ளன. இதன் காரணமாக சிறுவர்களின் வருகை குறைந்துவிட்டது. கோபி யூனியன் நிர்வாகம் பூங்காவை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture