மண்டல அளவிலான சிலம்ப விளையாட்டு போட்டி: முதல் பரிசு வென்றவீரர், வீராங்கனை

மண்டல அளவிலான சிலம்ப விளையாட்டு போட்டி: முதல் பரிசு வென்றவீரர், வீராங்கனை
X

மண்டல அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வென்ற பெருந்துறை மாணவ, மாணவிகள்

சிலம்ப விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகள் முதல் பரிசு வென்றனர்

ஈரோடு மாவட்டம், பெருந்துரை துடுப்பதி கிராமத்தில் இருந்து கடந்த 10 தேதி குமராபாளையம் எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியில் நடந்த மண்டல அளவிலான சிலம்ப விளையாட்டு தனிதிறமை போட்டியில் பகத்சிங் சிலம்ப விளையாட்டு அறக்கட்டளையின் சார்பில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம்பரிசு வென்றனர்.

சிலம்ப விளையாட்டு வீரர், வீராங்கனைகளை துடுப்பதி ஊராட்சி மன்ற தலைவி கவிதா அன்பரசு, பகத்சிங் சிலம்ப விளையாட்டு அறக்கட்டளையின் தலைவர் பல்லவி பரமசிவம், செஞ்சிலுவை சங்க செயலாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், உடற்கல்வி ஆசிரியர் சரவணகுமார், சீனாபுரம் அரசு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!