ஈரோடு அருகே கொடுத்த கடனை திரும்ப கேட்டவர் குடும்பத்தினர் மூவர் கொலை

ஈரோடு அருகே கொடுத்த கடனை திரும்ப கேட்டவர் குடும்பத்தினர் மூவர் கொலை
X

கைது செய்யப்பட்ட கல்யாணசுந்தரம் மற்றும் கல்லூரி மாணவன் சபரி

ஈரோடு அருகே கொடுத்த கடனை கேட்ட நபரின் குடும்பத்தினர் மூவரை கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் கைது

ஈரோடு மாவட்டம் சென்னிமலை கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பணன் கவுண்டர். இவரது மனைவி மல்லிகா, மகள் தீபா. இவர்களது வீட்டு தோட்ட பணியாளர் குப்பம்மாள்.

நேற்று கொரோனா சிகிச்சை முகாமிலிருந்து வருவதாக கூறி மர்ம நபர் மாத்திரைகளை வழங்கினார். மாத்திரையை சாப்பிட்டதில் மல்லிகா சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ள மூன்று பேரில் கருப்பண்ண கவுண்டர் மற்றும் மகள் தீபா ஆகியோர் கோவை தனியார் மருத்துவமனையிலும், தோட்ட பணியாள் குப்பம்மாள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் கல்யாணசுந்தரம் மற்றும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போத்திஸ்குமார் ஆகிய இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்யாண சுந்தரம், கருப்பண்ண கவுண்டரிமிடருந்து 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்கு திருப்பி கேட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த கல்யாண சுந்தரம், போத்தீஸ்குமாரிடம் விஷ மாத்திரை கொடுத்து அனுப்பி கொலை செய்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த குப்பம்மாள் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைதொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகள் தீபாவும் உயிரிழந்தார்.

தற்போது அதே கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கருப்பண்ண கவுண்டருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!