/* */

வாய்க்கால் கரை உடைந்து விவசாய நிலம், வீடுகளுக்குள் புகுந்த நீர்

கீழ்பவானி பாசன வாய்க்காலின் கரை உடைந்து விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

HIGHLIGHTS

வாய்க்கால் கரை உடைந்து விவசாய நிலம், வீடுகளுக்குள் புகுந்த நீர்
X

வாய்க்கால் கரை உடைந்து விவசாய நிலத்திற்குள் புகுந்த நீர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கீழ்பவானி பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு கடந்த 15 ஆம் தேதி முதல் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2000 கனஅடி நீர் வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் பெருந்துறை அருகே உள்ள நசியனூர் அடுத்த மலையபாளையம் என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி பாசன வாய்க்காலின் கரை உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் உடைந்த கரையை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வாய்காலில் 710 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 20 Aug 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  2. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  3. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  4. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  5. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  6. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  8. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  9. தேனி
    தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!
  10. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்