முன்கள பணியாளர்களுக்கான தடுப்பூசி முகாம்: பெருந்துறையில் துவக்கி வைப்பு!
கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 18 வயது முதல் 44 வயதுடைய முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்பட வேண்டும் என்று, ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில், இன்று பெருந்துறையில் முன்களப்பணியாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாமினை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
இம்முகாமில், முன்களப் பணியாளர்களான சுகாதாரத்துறை, வருவாய்துறை, காவல்துறை, நகராட்சி ஊழியர்கள், தனியார் மருத்துவமனை ஊழியர்கள் என, 400 நபர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி போடப்பட்டது. இவர்கள் அனைவரும் பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டை அல்லது சான்று மற்றும் ஆதார் அட்டையை பதிவு செய்து, தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மருத்துவர் சவீதா ஆர்த்தி தலைமையில் மருத்துவக்குழுவினர், இப்பணியில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu