ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரியில் காவல் உதவி மையம் திறப்பு

ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காவல் உதவி மையத்தை வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகச்சை அளிக்கப்பட்டு வந்தது. மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக முழுநேர கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஈரோடு மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் அதிகளவில் வர தொடங்கினர்.

இந்நிலையில் சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு மருத்துவமனை குறித்த விபரம், படுக்கை வசதிகள் விபரம், சிகிச்சை பெறுவோர் விபரம், ஆம்புலன்ஸ் உதவி போன்றவற்றை செய்து தரும் வகையில் காவல் உதவி மையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்திலேயே கட்டப்பட்டுள்ள இந்த காவல் உதவி மையத்தை கொரோனா தொற்றால் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினரை வைத்து அமைச்சர் முத்துசாமி இன்று திறந்து வைத்தார்.

பின்னர் கொரானாவிற்கு பலியான காவல்துறையினரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார். முன்னதாக காலிங்கராயன் விருந்தினர் இல்லத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டார் அதனை தொடர்ந்து சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்துவது பற்றி பொல்லான் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட எஸ்பி சசிமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்