ராம்நகரில் கழிவுநீர் சாக்கடை அமைத்துத் தரக்கோரி பாஜக சார்பில் மனு

ராம்நகரில் கழிவுநீர் சாக்கடை அமைத்துத் தரக்கோரி பாஜக சார்பில் மனு
X

பெருந்துறை எம்.எல்.ஏ.,விடம் மனு கொடுத்த பாஜகவினர். 

ராம்நகரில் கழிவுநீர் சாக்கடை அமைத்துத் தரக்கோரி எம்எல்ஏவிடம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனு வழங்கப்பட்டது.

பெருந்துறை வட்டம், சீனாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான ராம்நகர் பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பகுதியில் முறையான கழிவு நீர் செல்லும் கால்வாய் இல்லாததால், விதி ஓரங்களிலும், தார்சாலைகளிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அப்பகுதி மக்கள் சுமார் 10 ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் வேண்டி பலமுறை மனு கொடுத்துள்ளனர்.ஆகவே இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் நலம் காத்திட, பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து தொகையை ஒதுக்கி, ராம்நகர் பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஜெயக்குமார் எம்எல்ஏ-விடம் மனு அளிக்கப்பட்டது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்