சித்தோட்டில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சர்வீஸ் ரோடு திறப்பு..!

சித்தோட்டில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சர்வீஸ் ரோடு திறப்பு..!
X
சித்தோட்டில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சர்வீஸ் ரோட்டை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை கொண்டு அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.

ஈரோடு அடுத்துள்ள சித்தோடு பகுதி வழியாக செல்லும் தேசிய நான்கு வழிச்சாலையில் சர்வீஸ் ரோடு இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதோடு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சர்வீஸ் ரோட்டை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அந்த கோரிக்கையின் அடிப்படையில் தன்னார்வலர்களின் உதவியோடு சித்தோடு பகுதியில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்டம் செல்லும் தேசிய நான்கு வழி சாலையை, ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் முக்கிய சாலையுடன் இணைக்கும் வகையில் 930 மீட்டர் நீளத்தில், 5.5 மீட்டர் அகலத்தில் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டிலான தார்சாலை அமைக்கும் பணி நான்கு நாட்களாக மிக வேகமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அதன் பணிகள் முடிவுற்று சாலை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்ற வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, சித்தோடு தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் இறந்த தங்கராஜ் மற்றும் சபரி ஆகியோரின் குடும்பத்தைச் சார்ந்த பானுபிரியா, மகள் காவியா ஆகியோரை கொண்டு ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதுகுறித்து வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறுகையில், இந்த பகுதியில் சர்வீஸ் ரோடு இல்லாததால் பொதுமக்கள் சாலையை கடக்கும் போது ஏராளாமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. அவ்வாறு நடந்த விபத்தில் பலியான தங்கராஜ் மற்றும் சபரி ஆகியோரின் நினைகூறும் வகையில் இந்த சாலை அவர்களின் குடுப்பத்தாரை வைத்து திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேரோட்டில் இருந்து நேரடியாக சித்தோடு செல்லும் வழி அடைக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இருக்காது. மேலே உள்ள பாலம் வழியாக செல்லலாம்.சாலையில் மக்கள் அஜாக்ரதையாக பயணிக்கும் பொழுது விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களும் சாலைகளில் பயணிக்கும் பொழுது பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்.தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த பகுதிகளில் விபத்து ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுஅதனைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்சசியில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!