சென்னிமலை பேரூராட்சி பகுதி மக்களிடம் மனு பெற்ற அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

சென்னிமலை பேரூராட்சி பகுதி மக்களிடம் மனு பெற்ற அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
X
குடிநீர் பிரச்னையை அடியோடு தீர்க்க காவிரி குடிநீர் திட்டத்திற்கு தமிழக முதல்வர் 250 கோடி ஒதுக்கி உள்ளார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதி மக்களிடம் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதி மக்களிடம் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று நேரில் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். முதியோர் உதவி தொகை, விதவைகள் உதவி தொகை , குடும்ப அட்டை, இலவச வீட்டுமனை பட்டா, சாக்கடை தார்ச்சாலை தெரு விளக்கு போன்ற பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னிமலை பேரூராட்சி பகுதி மக்களின் குடிநீர் பிரச்னையை அடியோடு தீர்க்க காவிரி குடிநீர் திட்டத்திற்கு தமிழக முதல்வர் 250 கோடி ஒதுக்கி உள்ளார்.அத்திட்டத்தின் பணிகள் துவங்கி உள்ளது விரைவில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என தெரிவித்தார்.இந்த பொதுமக்கள் குறை கேட்டும் கூட்டத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அமைச்சர் துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு