அத்திக்கடவு அவினாசி திட்டம் எடப்பாடியார் கொண்டு வந்தது : அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்
பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் JK (எ) ஜெயக்குமார் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதற்காக நேற்று பெருந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட மாசம்மாவூர், கல்லுக்கடை காலனி, நடுவலசு,நல்லாம்பட்டி நகரம், நல்லாம்பட்டி மாரியம்மன் கோவில், நல்லாம்பட்டி காலனி,ஜே ஜே நகர்,பெத்தாம்பாளையம், ஓசைப்பட்டி பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்தார். அப்போது பொதுமக்களிடைய பேசிய அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார்..
கடந்த பத்து ஆண்டுகளாக பெருந்துறை பகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்து வளர்ச்சி பெற வைத்தது அம்மா அரசும் எங்கள் எடப்பாடியார் அரசும் தான்.
தற்போது பயன்பாட்டிற்கு வர உள்ள கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம்,அத்திக்கடவு அவிநாசி திட்டம் உள்ளிட்டவை எடப்பாடியார் அரசால் மக்களுக்கு வழங்கப்பட்ட திட்டம்.இதை எந்த தனி மனிதனும் சொந்தம் கொண்டாட முடியாது.
இந்த திட்டங்களை தான் கொண்டு வந்ததாக யாராவது பிரச்சாரம் செய்தால் அதனை பொதுமக்கள் நம்ப தேவையில்லை. மேலும் இது போன்ற ஏராளமான பணிகள் பெருந்துறைக்கு கொண்டு வரவேண்டுமெனில் கழகம் அறிவித்த வேட்பாளராகிய எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மீன்டும் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைய ஒத்துழைக்கவேண்டும்.
வருடம் தோறும் ஆறு சிலிண்டர்கள், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1500 உதவி தொகை, மகளிர் சுய உதவி குழு கடன் ரத்து உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை பெற நீங்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பிரச்சாரத்தின் போது ஒன்றியச்செயலாளர் விஜயன் (எ) ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ பொன்னுசாமி, யூனியன் சேர்மன் சாந்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu