கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு
பவானிசாகர் அணையின் முக்கிய கால்வாயான கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கரூர் மாவட்டம் மங்களப்பட்டி வரை சுமார் 124 மைல் தூரத்திற்கு கீழபவானி கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயை ரூ. 740 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்க அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த கால்வாய் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்த நிலையில் கால்வாயில் கான்கீரிட் தளம் அமைக்கப்பட்டால் பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். அதனால், கீழ்பவானி பாசன பாதுகாப்பு விவசாய சங்கத்தினர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பெருந்துறை பஸ் ஸ்டாண்டில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் , இந்த கான்கீரிட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu