பெருந்துறையில் நள்ளிரவில் பலத்த மழை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு அடுத்துள்ள பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வெப்ப காற்றுடன் கடுமையான வெயில் வாட்டி வருகின்றது ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக 106 டிகிரி முதல் 110 டிகிரி வரை வெயிலின் தாக்கம் காணப்பட்டது

இதனால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர் வானிலை ஆய்வு மையம் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது .

இந்நிலையில் ஈரோடு அடுத்துள்ள பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நள்ளிரவில் திடீரென பலத்த காற்று வீசியது பின்னர் எவ்வித காற்றும் இல்லாமல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. வெப்பத்தால் வாடிய பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெய்த மழையினால் குளிர்ச்சி அடைந்து மகிழ்ச்சியடைந்தனர்

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil