மூதாட்டி காதை அறுத்து கம்மல் பறிப்பு

மூதாட்டி காதை அறுத்து கம்மல் பறிப்பு
X

செல்லம்மாள்.

காஞ்சிகோயில் சூரியம்பாளையம் பகுதியில் மூதாட்டி காதை அறுத்து கம்மல் பறிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிகோயில் சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த சின்னசாமி மனைவி செல்லம்மாள். இவர் ஆடு, மாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த இரண்டு பேர் செல்லமா அருகே வந்து பைக்கை நிறுத்தி குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். உடனே செல்லம்மாள் கையில் வைத்திருந்த பாட்டிலை கொடுத்துள்ளார். அப்போது அந்த நபர் செல்லம்மாவின் காதில் இருந்த ஒரு கம்மலை பிடுங்கினார். இதனால் சத்தம் போட முயன்றபோது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மற்றொரு காதில் இருந்த கம்மலையும் காதுடன் அறுத்து கொண்டு தப்பி சென்றனர். காது அறுக்கப்பட்ட நிலையில் செல்லம்மாள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காஞ்சிக்கோவில் போலீசார் விசாரணை செய்து வருங்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!