சீனாபுரம் கால்நடை சந்தை: ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை

சீனாபுரம் கால்நடை சந்தை: ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை
X

சீனாபுரம் கால்நடை சந்தை - கோப்புப்படம் 

பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில் நடைபெற்ற கால்நடை சந்தையில் 1 கோடிக்கு மாடுகள் விற்பனையானது

பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில் நேற்று கால்நடை சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு சிவகிரி, அவல்பூந்துறை, அறச்சலூர், சென்னிமலை, சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம், திருப்பூர் மாவட்டம் முத்தூர், வெள்ளக்கோவில், நத்தக்காடையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் விர்ஜின் கலப்பின பசு மாடுகள் 100-ம், அதன் இன கிடாரி கன்றுக்குட்டிகள் 150-ம், சிந்து மற்றும் ஜெர்சி இன பசு மாடுகள் 120-ம், அதன் கிடாரிக்கன்றுக்குட்டிகள் 150-ம், 10 எருமை மாடு கன்றுக்குட்டிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.

விர்ஜின் கலப்பின பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.

சிந்து மற்றும் ஜெர்சி பசு மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது. சீனாபுரம் கால்நடை சந்தையில் மாடுகள் ரூ.1 கோடியே 20 லட்சம் வரை விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இங்கு வந்து மாடுகளை வாங்கி சென்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!