ஈராேட்டில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ்: அமைச்சர் வழங்கல்

ஈராேட்டில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ்: அமைச்சர் வழங்கல்
X

சென்னிமலையில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் மற்றும் பங்கு ஈவுத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் மற்றும் பங்கு ஈவுத்தொகை வழங்கும் விழா சென்னிமலையில் நடைபெற்றது.

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் மற்றும் பங்கு ஈவுத்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் போனஸ் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கொரோனோவினால் கைத்தறி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு, தற்போது முன்னேற்றம் அடைந்து வரும் சூழ்நிலையில் 6400 கைத்தறி நெசவாளர்களுக்கு 3 கோடி 37 லட்ச ரூபாய் போனஸாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொடுமணல் அகழ்வாய்வை பொறுத்துவரை அங்கு கிடைத்த பொருட்களை தமிழ் வளர்ச்சித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பத்திரிக்கையாளர் நல வாரிய அமைப்பதற்கு உண்டான தயாரிப்பு பணிகள் விரைந்து எடுத்து வருவதாகவும், உயர்நீதி மன்ற உத்தரவுப்படி பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளதால் அதற்குண்டான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்ற அமைச்சர் சாமிநாதன், நீதிமன்ற கால அவகாசத்திற்குள் தனிநபர் பத்திரிக்கையாளர் நல வாரியம் உறுதியாக விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!