பெருந்துறையில் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..

பெருந்துறையில் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..
X
பெருந்துறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் ஜேகே என்கிற ஜெயக்குமார் அறிவிக்கப்பட்டார். தமிழக முதல்வர் பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்த பின்பு மதியம் ஒரு மணிக்கு மேல் ஜெயக்குமார் பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்.தேர்தல் நடத்தும் அலுவலர் இலாஹிஜான் வேட்புமனுவை பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் தமிழக முதல்வரும்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பி எஸ் அண்ணன் அவர்களும் அதிமுக கோட்டையாக விளங்கும் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் என்னை வேட்பாளராக தேர்வு செய்தமைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் கழக நிர்வாகிகளின் முழு ஒத்துழைப்போடு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி மலர்களை கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களிடம் சமர்ப்பிப்பேன்.

மேலும் மக்களோடு மக்களாக எளிய தொண்டனாக இருந்து மக்களுக்காக பாடுபடுவேன்.நமது முதல்வர் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளே ஓட்டுகளாக மாறி நூறு சதவீத வெற்றிக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.

Tags

Next Story
ai solutions for small business