கடந்த 30 நாட்களில் 4 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரிப்பு : அமைச்சர் நாசர்
அமைச்சர் நாசர் ஈரோட்டில் ஆவின் பாலகங்கள் உட்பட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஈரோட்டில் ஆவின் பாலகங்கள் உட்பட பல்வேறு இடங்களில் காலை 5 மணி முதல் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியதாவது:
ஆவின் நிலையத்தில் பால் உற்பத்தி,விநியோகம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்த அறிவித்தப்படி புதிய விலைக்கு பால் விற்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
ஆவின் பூத்களில் ஆவின் சம்பந்தப்பட்ட பொருட்களை தவிர்த்து வேறு நிறுவன பொருட்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும். விவசாயிகளுக்கு தர வேண்டிய பாக்கி நிலுவை தொகைகள் விரைவில் வழங்கப்படும்.
கடந்த 30 நாட்களில் மட்டும் 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் மற்றும் விற்பனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா காலங்கள் முடிந்தவுடன் 10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் மற்றும் விற்பனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் பணி நியமனத்தின் போது நடந்த முறைகேடுகள் காரணமாக அந்த பணி நியமன ஆணை ரத்து செய்யப்பட்டு புதியதாக ஆட்களை தேர்வு செய்து நியமனம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu