ரேஷனில் 14 வகை மளிகைப்பொருள் வழங்கல்: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
தி.மு.க தேர்தல் அறிக்கையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 4 ஆயிரம் நிவாரணத்தொகையை, இரண்டு கட்டமாக வழங்க முடிவு செய்யப்பட்டு, கடந்த மாதம் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து, கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந் தேதி முதல், தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளில் கொரோனா 2-ம் கட்ட நிவாரண தொகையான ரூ.2000 மற்றும் உப்பு, கோதுமை மாவு, உளுந்தம் பருப்பு,கடலைப்பருப்பு உட்பட 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைளிலும் ஜூன் 15ம் தேதி முதல், இப்பொருட்கள் வழங்கப்படும் என்று, அவர் அறிவித்தார்.
அதன்படி, ஈரோடு பெருந்துறை ஆர்.எஸ். பகுதியிலுள்ள ரேசன் கடையில், இன்று கொரோனா இரண்டாம் கட்ட நிவாரணநிதி மற்றும் மளிகை தொகுப்பு பொருட்களை, தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி பொதுமக்களுக்கு வழங்கினார். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 1152 ரேஷன் கடைகள் மூலம் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu