பெருந்துறை அருகே நெடுஞ்சாலையில் விபத்து: 10பேர் படுகாயம்

பெருந்துறை அருகே நெடுஞ்சாலையில் விபத்து: 10பேர் படுகாயம்
X

விபத்துக்குள்ளான கார் மற்றும் வேன்.

பெருந்துறை அருகே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 10பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்‌.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பெத்தாம்பாளையம் பிரிவு பகுதியில் வாய்ப்பாடியை சேர்ந்தவர்கள் திருமண நிகழ்ச்சிக்காக ஈரோடு சென்று திரும்பி கொண்டிருந்த வேனும் கேரளாவில் இருந்து வந்து கொண்டிருந்த காரும் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.இதனால் விபத்தில் வேனில் மற்றும் காரில் பயணித்த 10 பேர் படுகாயங்களுடன் மீட்டு ஐஆர்டிடி-யில் அனுமதித்தனர்.விபத்து குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!