ஈரோட்டில் மஞ்சள் வணிகம் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள், ஈரோடு பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு விற்பனை சங்கங்களில் விவசாயிகள் தங்களது மஞ்சளை ஏலம் மூலம் விற்பனை செய்து வருகிற்னர். இங்கு விவசாயிகள் விற்பனை செய்யும் மஞ்சளுக்கான தொகை ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படுகிறது. ஆனால், மசாலா பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் தயாரிப்புக்கான தேவைக்கு 10 குவிண்டால் முதல் 20 குவிண்டால் வரை மஞ்சள் கொள்முதல் செய்யும் குடிசைத்தொழில் மற்றும் சிறு தொழில் முனைவோர் பெரும்பாலும் பணத்தை கையில் எடுத்து வந்து தான் மஞ்சளை வாங்கி செல்வர்.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் வரும் ஏப் 6ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ரூ.50ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து சோதனை சவாடிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர், நிலைக்கண்காணிப்பு குழுக்கள் ஆங்காங்கே நின்று வாகன சோதனை மற்றும் அதிக கெடுபிடியும் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக மஞ்சள் கொள்முதல் செய்யும் விவசாயிகள் பணத்தை எடுத்து வர அச்சம் அடைந்துள்ளதால், மஞ்சள் வணிகம் பாதிப்படைந்துள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் மஞ்சள் வணிகர்கள் மற்றும் விவசாயிகள் ரூ.1லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu