கீழ்பவானி கான்கீரிட் தளம் அமைக்க எதிர்ப்பு

கீழ்பவானி  கான்கீரிட் தளம் அமைக்க எதிர்ப்பு
X
கீழ்பவானி கால்வாயில் 740 கோடி மதிப்பில் கான்கீரிட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 5வது நாளாக போராட்டம் நடத்தினர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கரூர் மாவட்டம் மங்களப்பட்டி வரை 124 மைல் தூரம் வரை

740 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கீழ்பவானி கால்வாயில் கான்கீரிட் தளம் அமைக்க அரசு திட்டமிட்டு, இதற்கான பணிகளை பரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கால்வாய் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் பாசன வசதி பெற்று வந்த நிலையில் கால்வாயில் கான்கீரிட் தளம் அமைப்பதால் பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். எனக் கூறி கீழ்பவானி பாசன பாதுகாப்பு விவசாய சங்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று பெருந்துறை அருகேயுள்ள நல்லாம்பட்டி கீழ்பவானி கால்வாயில் 5 வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடடத்தின் போது கீழ்பவானி கால்வாயில் கான்கீரிட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story
ai solutions for small business