கீழ்பவானி வாய்க்கால் கரையை சேதப்படுத்திய நபர்கள்; போலீசில் புகார்
Today erode news in tamil- கீழ்பவானி வாய்க்கால் (கோப்பு படம்)
Today erode news in tamil- ஈரோடு மாவட்ட பொதுப்பணித்துறை, கவுந்தப்பாடி பாசனப் பிரிவு உதவி செயற்பொறியாளர் ரமேஷ், திங்களூர் போலீசில் புகார் மனு அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
பொதுப்பணித்துறை நீர்வளத்துறை பாசனப் பிரிவு கட்டுப்பாட்டில் உள்ள கீழ்பவானி கால்வாயில், 40-வது மைல் அருகே கசிவுநீர் அடிமட்ட பாலம் அமைந்துள்ளது. இப்பாலத்தின் இடதுபுற மண் கரையில் இருந்த துவாரம், கான்கிரீட் கலவை மூலம் கால்வாயின் இரு பக்கங்களிலும், கால்வாயின் உட்புறமும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 5-ம் தேதி இரவு மர்ம நபர்கள் கடப்பாரையால், ஒரு அடி ஆழத்துக்கு துளை போட்டு கான்கிரீட் போடப்பட்ட பகுதியை சேதப்படுத்தி உள்ளனர். இவ்வாறு போடப்பட்ட துளையின் வழியாக தண்ணீர் உட்பகுந்து கரையை பலவீனப்படுத்தி கரை உடையும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அவ்வாறு கரை உடைந்தால், மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கரையில் போடப்பட்ட கான்கிரீட் தளத்தை உடைத்து, கரையை பலவீனப்படுத்தும் செயலில் ஈடுபட்ட நபர்களை விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். கான்கிரீட் தளம் சேதப்படுத்திய இடத்தில் மீண்டும் மர்மநபர்கள் கான்கிரீட்டை உடைத்து, பெரிய அளவில் சேதப்படுத்த வாய்ப்புகள் உள்ளன. கான்கிரீட் உடைந்த இடத்தில் மீண்டும் கான்கிரீட் போட்டு துவாரத்தை சரி செய்யும் வரை, இரவு மற்றும் பகல் நேரங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu