உதயநிதி அமைச்சராக வர வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்: அமைச்சர் முத்துசாமி

உதயநிதி அமைச்சராக வர வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்: அமைச்சர் முத்துசாமி
X

விழாவில் பேசிய அமைச்சர் முத்துசாமி.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய 141 வளர்ச்சி திட்டங்கள் குறித்த அறிக்கையை பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, கோபிசெட்டிபாளையம் தனி மாவட்டமாக அறிவிக்க கோரி உள்ளதாகவும், இது புறந்தள்ளும் கோரிக்கை அல்ல என்றார். நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்க பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் மக்களே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் விரும்புகின்றனர் என்றும் இது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!