/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
X

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில் 10 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 56 இடங்களிலும் என மொத்தம் 66 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

சிரமமின்றி தடுப்பூசி போடும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணியை கடந்த வியாழக்கிழமை முதல் நடைமுறைபடுத்தியது. அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் ஒவ்வொரு நாளும் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதைப்போல் புறநகர்ப் பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும் மையம் அதிகரிக்கப்பட்டு தினமும் 110 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை தடுப்பூசிகள் வருவதைப் பொறுத்து வழக்கம்போல் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 30 Jun 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது