பெண்ணை தாக்கி நகையைப் பறித்த பக்கத்து வீட்டு வாலிபர்..!

பெண்ணை தாக்கி நகையைப் பறித்த பக்கத்து வீட்டு வாலிபர்..!
X
பெண்ணை தாக்கி நகையைப் பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தாராபுரம் : தாராபுரத்தை அடுத்த சின்னக்காம்பாளையம், புது காலனியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி பேபி ஷாலினி, 30; கணவர் வெளியே சென்றிருந்த நிலையில், நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சபரி மணிகண்டன், 28, வீட்டுக்குள் கம்பியுடன் புகுந்தார்.

தாக்குதல் மற்றும் நகை கொள்ளை

பேபி ஷாலினியின் தலையில் தாக்கி, நகைகளை கழற்றி தரும்படி மிரட்டியுள்ளார். அதிர்ச்சி அடைந்தவர் இரண்டரை பவுன் தாலி சங்கிலி, கால் பவுன் கம்மல் மற்றும் கொலுசை கழற்றி கொடுத்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி

தலையில் படுகாயத்துடன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்த பேபி ஷாலினி, அலங்கியம் போலீசில் புகாரளித்தார்.இதன் அடிப்படையில் சபரி மணிகண்டனை, போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business