அந்தியூரில், ஓம் காளியம்மன் கோவில் திருவிழா

அந்தியூரில், ஓம் காளியம்மன் கோவில் திருவிழா
X
50க்கும் மேற்பட்ட பக்தர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்

அந்தியூர்: அந்தியூர் அருகே ஜீ.எஸ். காலனியில் அமைந்துள்ள ஓம் காளியம்மன் கோவில் திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டன.

நேற்று நடைபெற்ற முக்கிய நிகழ்வில், பக்தர்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்று பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் திரண்ட இந்த வைபவம் மிகுந்த பக்தி உணர்வுடன் நடந்தது.

இன்று மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. சுற்றுவட்டார பக்தர்கள் அம்மனை தரிசிக்கக் கூட்டமாக வந்தனர்.

இதற்கிணங்க, வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள குரும்பபாளையம் மேடு ஓம் காளியம்மன் கோவிலிலும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இங்கு 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இளைஞர்கள், இளம் பெண்கள் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story