கோபியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

கோபியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்
X

நலத்திட்ட உதவிகள் வழங்கும் அமைச்சர் முத்துசாமி.

கோபியில் ரூ.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்டப்பணிகள் அமைச்சர் முத்துசாமி வழங்கினார்

கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி தலைமை தாங்கினார். கோபி ஆர்டிஓ., பழனிதேவி, திமுக மாவட்ட செயலாளர் நல்லசிவம், அந்தியூர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு, பல்வேறு நலத்திட்டகளை ரூ.3 கோடி மதிப்பில் வழங்கினார்.

மேலும் கோபி பா.வெள்ளாளப்பாளையத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் வழியில் ரூ.12 லட்சம் செலவில் கான்கிரீட் சாலை அமைத்தல் உள்பட பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்களையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில திமுக மருத்துவ அணி மாநில துணை அமைப்பாளர் டாக்டர் செந்தில்நாதன், விவசாய அணி மாநில இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி, முன்னாள் சிட்கோ வாரியத்தலைவர் சிந்துரவிச்சந்திரன், ஒன்றியசெயலாளர் முருகன், நகர செயலாளர் என்.ஆர்.நாகராஜ், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் கிருபாகரன், இளைஞர்அணி அமைப்பாளர் சீனிவாசன், அபிராமிவெங்கிடு, நஞ்சைகோபி ஊராட்சி செயலாளர் கணேசன், கொங்குநாடு மக்கள் தேசிய மாவட்ட செயலாளர் சிவராஜ், கோபி தாசில்தார் தியாகராஜன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

வெள்ளாளப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர், அங்குள்ள அரசு பள்ளியில் நடைபெற்று வரும் கட்டிடப்பணிகளை திடீரென்று சென்று பார்த்தார். அப்போது ஆசிரியர்கள், அமைச்சரிடம், பள்ளிக்கூடத்திற்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை வசதி தேவையை என்பதை எடுத்து கூறினார்கள். இதை கேட்ட அமைச்சர், பள்ளியில் உடனடியாக தற்காலிக கழிவறை அமைக்கப்படும், கூடுதல் வகுப்பறைகள் கட்டிடத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்