வனத்தில் தீ வைத்தவர் கைது

வனத்தில் தீ வைத்தவர் கைது
X
பசுவேஸ்வரன் கோவில் அருகே, வனத்துக்கு தீ வைத்த ஒருவர் கைது செய்யப்பட்டார்

வனத்தில் தீ வைத்தவர் கைது

அந்தியூர்: பர்கூர்மலை தட்டகரை வனப்பகுதியில், கர்கேகண்டி கிழக்கு பீட், பசுவேஸ்வரன் கோவில் சுற்றுவட்டார பகுதியில், நேற்று மதியம் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். தட்டகரை ரேஞ்சர் ராமலிங்கம் தலைமையிலான குழுவினர் வனப்பகுதியை பார்வையிடும் போது, அங்கு ஒருவர் காய்ந்த புற்களுக்கு தீ வைத்து கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை பிடித்து விசாரித்ததில், அவர் பர்கூர் வேலாம்பட்டி பகுதியை சேர்ந்த மாதேவன் (38) என்பதும், புதிதாக புல் முளைப்பதற்காக தீ வைத்ததாகவும் கூறினார். வனத்துறையினர் அவரை கைது செய்து, பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story