சித்தோட்டில் கள்ளத்தனமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்தவர் கைது

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

சித்தோட்டில் கள்ளத்தனமாக பதுக்கி அதிக விலைக்கு மது விற்பனை செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சித்தோடு பகுதியில் தமிழக அரசின் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், சித்தோடு போலீசார் சித்தோடு அம்பேத்கார் நகர் பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

அப்போது, அதே பகுதியில் கிழக்குத் தெரு முதல் வீதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜ்குமார் (41), தனது வீட்டில் 25 மது பாட்டில்களை வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ராஜ்குமாரைக் கைது செய்த போலீசார், மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!