மகா சிவராத்திரி: சத்தியமங்கலம் அருகே 1 லட்சம் சிவலிங்கங்களுக்கு சிறப்பு பூஜை

மகா சிவராத்திரி: சத்தியமங்கலம் அருகே 1 லட்சம் சிவலிங்கங்களுக்கு சிறப்பு பூஜை
X
சத்தியமங்கலம் அருகே ஒரு லட்சம் சிவலிங்கங்களுக்கு புதன்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜை நடைபெற்றது.

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே ஒரு லட்சம் சிவலிங்கங்களுக்கு புதன்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜை நடைபெற்றது.

சத்தியமங்கலம் அருகே தனவாசி கரடு பகுதியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் நிா்மாணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது கோயில் வளாகத்தில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து தினந்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள்

சிவராத்தியையொட்டி இக்கோயிலில் புதன்கிழமை நான்கு கால பூஜைகள் விடியவிடிய நடைபெற்றன. முன்னதாக விநாயகா் கோயிலில் இருந்து தீா்த்தக் குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமஞ்சனம் மற்றும் அபிஷேக பூஜை

திருக்கயிலாய வாத்தியம் முழங்க சிவலிங்கங்களுக்கு திருமஞ்சனம், பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேக பூஜை நடைபெற்றது.

ஏராளமான பக்தா்கள் தனித்தனியாக சிவலிங்கத்துக்கு நான்குகால பூஜை செய்து வழிபட்டனா். இதைத் தொடா்ந்து அலங்கார பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

Tags

Next Story