புதிய தொழில் முனைவோருக்கு 25% மானியத்துடன் கடன்: ஈரோடு கலெக்டர்

புதிய தொழில் முனைவோருக்கு 25% மானியத்துடன் கடன்: ஈரோடு கலெக்டர்
X

ஈரோடு  மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி

ஈரோடு மாவட்டத்தில், புதிய தொழில் முனைவோருக்கு 25 சதவீத மானியத்துடன் கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

ஈரோடு மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோருக்கு 25 சதவீத மானியத்துடன் கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

தமிழக அரசு குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்கள், முதல் தலைமுறை தொழில் முனைவோர் மூலம் ஏற்படுத்திடவும், "புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை (NEEDS) செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கு, திட்டமதிப்பீட்டில் 25% அதிக பட்சமாக ரூ. 50.00 லட்சம் வரை முதலீட்டு மானியம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், 02.09.2021 முதல் மானியத் தொகையானது அதிகபட்சமாக ரூ.75.00 இலட்சம் என உயர்த்தி அரசாணை எண். 47, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, நாள்: 01.10.2021 வாயிலாக தமிழக அரசு ஆணையிட்டுள்ளது .

நமது மாவட்டத்தில் விவசாயம், உணவு சார்ந்த உற்பத்தி/ சேவை நிறுவனங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட விவசாயம், உணவு, பால் சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள், ஜவுளி தொழில்களான ஆட்டோ லூம், ஏர்ஜெட் லூம், நூற்பாலைகள், பிராசசிங், பேக்கேஜிங் பொருட்கள் தயாரிப்பு, கயிறு சார்ந்த மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், அரிசி ஆலை, எண்ணெய் தயாரிப்பு, ஆட்டோமொபைல் தயாரிப்பு, எலக்ட்ரிக்கல் பொருட்கள் தயாரிப்பு, மருத்துவ உபகரணங்கள், N95 முகக்கவசம், சானிடைசர் மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களான அழகு நிலையம், உடற்பயிற்சி நிலையம், ஆட்டோமொபைல் பழுது பார்க்கும் நிறுவனங்கள் தொடங்கலாம்.

எனவே தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இணைப்புகளுடன் (2 நகல்கள்) பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், ஈரோடு 638 001 அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுன்னி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!