பட்டியலின மக்களுக்கு நிலம் வழங்க கோரிக்கை

பட்டியலின மக்களுக்கு நிலம் கேட்டு முறையீடு
ஈரோடு: சமூக நீதி மக்கள் கட்சி நிறுவன தலைவர் திரு. வடிவேல் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டியலின மக்களுக்கு நிலம் வழங்க கோரி முறையீடு செய்துள்ளார்.
வடிவேல் அளித்த மனுவில், மொடக்குறிச்சி தாலுகா வடுகப்பட்டியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு நில குடியேற்ற சங்கத்திற்கு 483 ஏக்கர் விவசாய நிலம் பட்டியலின அருந்ததியர் சமுதாய ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பின்னர் ஈரோடு வருவாய் கோட்ட அலுவலரின் செயல்முறைப்படி நில ஒப்படைவு ரத்து செய்யப்பட்டு, அந்த நிலங்கள் தரிசாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிலங்கள் விற்பனை, அடமானம், குத்தகை என பல்வேறு வழிகளில் மோசடி செய்யப்பட்டு, பிற சமுதாயத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக வருவாய்த் துறையினர் ஏற்கனவே ஆய்வு செய்திருப்பதாகவும், அரச்சலூர் மற்றும் வடுகப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த அருந்ததியர் சமுதாய மக்கள் தனித்தனியாக மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் விரைவான விசாரணை மேற்கொண்டு, உரிய பயனாளிகளுக்கு அந்த நிலங்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று வடிவேல் தனது மனுவில் கோரியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu