வாக்காளர் அட்டையை ஒப்படைத்து மக்கள் போராட்டம்

வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே உள்ள இலுப்புலி கிராமம் மற்றும் மாரம்பாளையம் - பெராங்காடு பகுதியில் 12 விவசாய குடும்பங்கள் பயன்படுத்தும் பொது பாதையில் சிலர் கற்கள் மற்றும் மரங்களை கொட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருச்செங்கோடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த பிப்ரவரி 9-ல், நீதிமன்றம் பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, அனைவரும் செல்லக்கூடியதாக தீர்ப்பு வழங்கியது. எனினும், இதுவரை அந்த தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லை.
இதையடுத்து, நேற்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் மா.கம்யூ. கட்சி நிர்வாகிகள் ரவி, தங்கவேல் முன்னிலையில், துணை தாசில்தார் கனகலட்சுமி, ஆர்.ஐ. கண்ணன், வி.ஏ.ஓ. தீபன்ராஜ் ஆகியோரிடம், வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைத்தனர். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாகி ராமசாமி உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu