விவசாயிகள் கூடுதல் தண்ணீர் வேண்டும் என கோரிக்கை

விவசாயிகள்  கூடுதல் தண்ணீர் வேண்டும் என கோரிக்கை
X
கீழ்பவானியில், பயிர்களை காக்க கூடுதல் தண்ணீர் வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்

கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற வேளாண் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க செயலாளர் நல்லசாமி கூறுகையில், தற்போது 6 நனைப்புக்கு வழங்க வேண்டிய தண்ணீர், 5 நனைப்புக்கு மட்டுமே திறக்கப்படுகிறது. மே மாதத்தில் 6ம் நனைப்புக்கும் தண்ணீர் திறக்க வேண்டும், எனக் கோரினார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பெரியசாமி, கரும்பு விவசாயிகள் பதிவு செய்தாலும், பதிவு செய்யாதவர்களிடம் அதிக விலைக்கு கரும்பு வாங்கப்பட்டு, உடனே பணம் வழங்கப்படுகிறது. ஆனால் பதிவு செய்த விவசாயிகளின் கரும்பு காய்ந்த பிறகே வெட்டி, பணம் கொடுக்கின்றனர். இந்த நீதி இல்லை, இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தினார்.

காளிங்கராயன் பாசன சபையின் வேலாயுதம், ஏப்ரல் 23ம் தேதி காளிங்கராயன் பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தாமல், அதிக வெயில் காரணமாக மேலும் 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்த பொறியாளர்கள், விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Tags

Next Story