குடிநீரில் கலந்த இரும்புத் துகள்கள்

குடிநீரில் கலந்த இரும்புத் துகள்கள்
X
புளியம்பட்டி நகராட்சியில், இரும்புத் துகள்கள் கலந்த குடிநீர் மற்றும் மஞ்சள் நிற குடிநீரால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்

புளியம்பட்டி நகராட்சியில் மஞ்சள் நிற குடிநீர் – மக்கள் அதிர்ச்சி

புளியம்பட்டி நகராட்சியில் குடிநீர் விநியோகம் மஞ்சள் நிறத்தில் வழங்கப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பவானிசாகர் அணையிலிருந்து இரண்டு குடிநீர் திட்டங்களின் மூலம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது அம்ருத் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் புதிய குடிநீர் இணைப்புகளை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 14வது வார்டில் சில தினங்களுக்கு முன்பு விநியோகிக்கப்பட்ட குடிநீர், சேமித்து பார்த்தபோது மஞ்சள் நிறமாக இருந்தது. இதனால் மக்கள் அதிருப்தியடைந்து, புகார் தெரிவித்தனர். இருப்பினும், இதுகுறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மக்கள் வேதனை தெரிவிக்கையில், "சமீபத்திய நாட்களில் நகராட்சி வழங்கும் தண்ணீர் அடிக்கடி மாறுபட்ட நிறத்தில் வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு இரும்புத் துகள் கலந்த தண்ணீர் கிடைத்தது. இப்போது மஞ்சள் நிறமாக உள்ளது. சுத்திகரிப்பு செய்யப்படுகிறதா? குளோரின் சேர்க்கப்படுகிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story