2 போலீஸ் ஏட்டுகள் சஸ்பெண்ட்

2 போலீஸ் ஏட்டுகள் சஸ்பெண்ட்
X
பெருந்துறையில், கைதி தப்பி ஓடியதால் 2 போலீஸ் ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்

கைதி தப்பிய பரபரப்பு – இரண்டு ஏட்டுகள் பணிநீக்கம்

ஈரோடு: வெள்ளோடு போலீஸ் நிலைய ஏட்டுகளான பாரதி மற்றும் கலைமணி, கைதி தப்பிய விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த ரூபிகான் (35) என்பவர், மொபைல் டவர் ஒயர் வெட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, கடந்த 26ஆம் தேதி ஈரோடு விரைவு நீதிமன்றம்-1ல் ஆஜர்ப்படுத்தப்பட்டார். பின்னர், பெருந்துறை கிளை சிறையில் அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

சிறைக்கு அழைத்து செல்லும் வழியில், பெருந்துறையில் உள்ள ஒரு ஓட்டலில் ரூபிகானுக்கு உணவளிக்க போலீசார் முடிவு செய்தனர். அதற்கிடையில், கை கழுவச் சென்றதாகக் கூறி, அவர் தப்பி ஓடி மறைந்தார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த, தனிப்படை அமைத்து ரூபிகானை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைதி தப்பிய விவகாரத்தில் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதாக, எஸ்.பி. ஜவகர் உத்தரவின் பேரில் ஏட்டுகள் பாரதி, கலைமணி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags

Next Story