இரு சுவர்களுக்கு நடுவே சிக்கி உயிரிழந்த பசு

இரு சுவர்களுக்கு நடுவே சிக்கி உயிரிழந்த பசு
X
கோபியில், பசு இரு சுவர்களுக்கு நடுவே சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தது

இரு சுவர்களுக்கு நடுவே சிக்கி மூச்சுத்திணறி பலியான சினை பசு – கோபியில் சோகம்

கோபி: கோபி அருகே கஸ்பா தொட்டிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரக்குமார் (46) தனது மூன்று சிந்து மாடுகளின் மூலம் வாழ்வை நடத்தி வந்தார். நேற்று அந்த மாடுகள் வழக்கம் போல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது, ஐந்து வயதான சினை மாடு வழிதவறி அண்ணாநகர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அங்கு, இரு வீடுகளுக்கு இடையேயான குறுகிய இடத்தில் சிக்கிக்கொண்டு தானாக வெளியேற முடியாமல் போராடியது.

நீண்ட நேரம் சத்தமிட்டு துயரப்பட, தகவல் அறிந்த கோபி தீயணைப்பு துறையினர் உடனே விரைந்து வந்தனர். பொக்லைன் உதவியுடன், கயிறு கட்டி மாட்டை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ai based agriculture in india