ஈரோட்டில் 2ம் நாளாக கடுமையான வெயில்

ஈரோட்டில் 2ம் நாளாக கடுமையான வெயில்
X
ஈரோட்டில் கொட்டிய வெயில், 39°C க்கு மேல் சென்ற வெப்ப நிலவரம்

ஈரோட்டில் 2-ம் நாளாக சதமடித்த வெயில்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெயில் கடுமையாக சுட்டெரித்து மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது.

கோடை காலம் முழுமையாக தொடங்குவதற்கு முன்பே வெப்பநிலை சதமடித்துள்ளது. நேற்று முன்தினம் 38.8 டிகிரி செல்சியஸ் (101.84 டிகிரி பாரன்ஹீட்) ஆக பதிவான வெப்பநிலை, நேற்று மேலும் உயர்ந்து 39.2 டிகிரி செல்சியஸ் (102.56 டிகிரி பாரன்ஹீட்) ஆக பதிவாகியுள்ளது.

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவது மாநகர மற்றும் மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் நாட்களில் வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள வெளியில் செல்லும்போது குடை, குளிர்பானங்கள் மற்றும் போதுமான தண்ணீர் எடுத்துச் செல்லுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மதிய நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story