தமிழகம் முழுவதும் ஓய்வூதிய திட்ட மாற்றத்தால், உண்ணாவிரதம்

தமிழகம் முழுவதும் ஓய்வூதிய திட்ட மாற்றத்தால்,  உண்ணாவிரதம்
X
ஈரோட்டில் ஓய்வூதிய மாற்றத்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒன்றுபட்ட போராட்டம்

ஈரோட்டில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் உண்ணாவிரத போராட்டம்

தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதுடன், பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயமனோகரன் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், மதியழகன் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர் செல்வராணி போராட்டத்தை தொடங்கி வைத்தனர். மேலும், உயர்மட்ட குழுவை சேர்ந்த ரமாராணி, தங்கவேலு, பொதுக்குழு உறுப்பினர் பிரகாசம் உள்ளிட்டோர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.

இந்த போராட்டத்தில், நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்து பங்கேற்று, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.


Tags

Next Story