கோபி கூட்டுறவு கட்டட சங்கத்தில் பணம் கையாடல் செய்த வழக்கில், சங்க செயலாளருக்கு 5 ஆண்டுகள் சிறை..!

கோபி கூட்டுறவு கட்டட சங்கத்தில் பணம் கையாடல் செய்த வழக்கில், சங்க செயலாளருக்கு 5 ஆண்டுகள் சிறை..!
X
கோபி கூட்டுறவு கட்டட சங்கத்தில் பணம் கையாடல் செய்த வழக்கில், சங்க செயலாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

ஈரோடு : கோபி கூட்டுறவு கட்டட சங்கத்தில் பணம் கையாடல் செய்த வழக்கில், சங்க செயலாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபியில் கூட்டுறவு கட்டட சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு சங்கச் செயலாளராகப் பணியாற்றிய ஜி.கே.வெங்கடேசன், பல்வேறு முறைகேடு மற்றும் பணம் கையாடல் செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் 21.4.2009-இல் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

ரூ.15.90 லட்சம் கைப்பற்றல்

அப்போது, சங்கச் செயலாளா் ஜி.கே.வெங்கடேசனிடம் ரூ.15.90 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், சங்க உறுப்பினா்களின் நிரந்தர வைப்பு நிதியில், அவா்களுக்கு தெரியாமல் கையாடல் செய்தது தெரியவந்தது.

10 பிரிவுகளில் வழக்குப் பதிவு

இதையடுத்து, வெங்கடேசனைக் கைது செய்த போலீஸாா், 10 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா். இவ்வழக்கு விசாரணை, ஈரோடு தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ராமச்சந்திரன், குற்றவழக்கில் பதிவு செய்யப்பட்ட பிரிவு வாரியாக தீா்ப்பளித்தாா்.3 பிரிவுகளை சோ்த்து ஓராண்டு சிறை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம், 5 பிரிவுகளுக்கு 2 ஆண்டுகள் சிறை ரூ.5 ஆயிரம் அபராதம், 2 பிரிவுகளுக்கு 2 ஆண்டுகள் சிறை ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!