ஈரோடு அடுத்த அந்தியூரில் ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த குதிரைகள்

ஈரோடு அடுத்த அந்தியூரில் ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த குதிரைகள்
X

அந்தியூர் - பர்கூர் சாலையில் நடைபெற்ற ரேக்ளா பந்தயம்.

திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு அந்தியூரில் குதிரை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு அந்தியூரில் குதிரை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

அந்தியூர் - பர்கூர் சாலையில் நடைபெற்ற இப்பந்தயத்துக்கு அந்தியூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி என்.சிவக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

புதிய குதிரைகள், 43 அங்குல உயர குதிரைகளுக்கு 8 மைல் தொலைவும், 45 அங்குல உயர குதிரைகளுக்கு 9 மைல், பெரிய குதிரைகளுக்கு 10 மைல் தொலைவும் இலக்காக வைக்கப்பட்டிருந்தன. போட்டிகள் தொடங்கியதும் குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓட தொடங்கின. இதனை சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர்.

அந்தியூர் பர்கூர் சாலை வரட்டுப்பள்ளம் அணை சோதனைச்சாவடி வரையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் 50-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன. போட்டிகளில் வென்ற குதிரைகள், உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது. ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.ஏ.சேகர், கெட்டிசமுத்திரம் ஊராட்சி திமுக முன்னாள் செயலாளர் பி.நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare