ஈரோட்டில் பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி

ஈரோட்டில் பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி
X

பைல் படம்.

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக " பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி " நடைபெற உள்ளது.

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக " பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி " வரும் 06-04-2022 முதல் 13-05-2022 வரை 30 நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சியின் போது சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். மேற்கண்ட பயிற்சியில் ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க முடியும். 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும் " வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் " அல்லது " நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் " இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சி திட்டத்தில் சேர கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு, ஈரோடு - 638002 -யில் முன்பதிவு நடைபெற்று வருகிறது. அல்லது 8778323213, 7200650604 எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!