இளைஞர்களே தயாராகுங்கள், இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பு

இளைஞர்களே தயாராகுங்கள், இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பு
X
இந்திய ராணுவத்தில் சேர விரும்புவோருக்கு, ஏப்ரல் 10 ஆம் தேதி வரை ராணுவ ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பு

ஏப்ரல் 10 ஆம் தேதி வரை, இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு! 2025-26 ஆண்டிற்கான ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், கிளார்க், ஸ்டோர் கீப்பர், மற்றும் டிரேட்ஸ் மேன் போன்ற பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

இந்த பணிகளுக்காக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் டிரேட்ஸ் மேன் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த திருமணம் ஆகாத ஆண்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.joinindianarmy.nic.in இணையதளத்தில் சென்று, தேவையான தகவல்களை சரிவுசெய்து, விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றுவது, நாட்டிற்கு சேவை செய்யும் பெருமையை தருகிறது. விருப்பமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

Tags

Next Story