காவிரி, பவானி கரையோர மக்களே ஜாக்கிரதை: எச்சரிக்கிறார் தாசில்தார்

வெள்ளம் அதிகரித்துள்ளதால், பவானி, காவிரி ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

பவானி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள், அனைவரும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, ஈரோடு மாவட்ட கலெக்டர் சார்பில், பவானி தாசில்தார் கேட்டுகொண்டுள்ளார்.

இது குறித்து, பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மேட்டூர் அணை 120 அடியை எட்டும் நிலையில் உள்ளதால், அணையில் இருந்து உபரி நீர் எந்நேரமும் திறந்து விடப்படலாம்.

எனவே, பவானி வட்டத்தில் உள்ள சிங்கம்பேட்டை, காடப்பநல்லூர், வராதநல்லூர், சன்னியாசிபட்டி, ஊராட்சிக்கோட்டை, பவானி மற்றும் இதர ஊர்களின் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் அனைவரும், ஆற்றில் குளிக்கவோ , துவைக்கவோ செல்ல வேண்டாம். தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுக்காப்பாக இருக்குமாறு, ஈரோடு மாவட்ட கலெக்டர் சார்பில் கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil