தர்பூசணியில் ரசாயன கலப்பு

தர்பூசணியில் ரசாயன கலப்பு வதந்தி தோட்டக்கலை துறை விளக்கம்
ஈரோடு மாவட்டத்தில் தர்பூசணியில் ரசாயன கலப்பு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் மரகதமணி தெரிவித்துள்ளார்.
அவரது விளக்கத்தின் படி, ஈரோடு மாவட்டத்தில் 100 ஹெக்டேருக்கு மேல் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்து வருகின்றனர். அம்மாபேட்டை, அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி, கொடுமுடி மற்றும் தாளவாடி பகுதிகளில் தர்பூசணி அதிகமாக விளைவித்து சந்தைப்படுத்தப்படுகின்றது. இந்நிலையில், பழங்களை சிவப்பாக மாற்ற ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக பரப்பப்படும் தவறான தகவல்கள், விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வதந்திகள் காரணமாக விற்பனை குறைய, விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். உண்மையில், தர்பூசணியின் சிவப்பு நிறம் அதன் இனத்தின்படியே உருவாகும் இயற்கை தன்மை ஆகும். எனவே, இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் தோட்டக்கலை துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu