ஈரோடு உள்ளாட்சி இடைத்தேர்தல்: 9 இடங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை

ஈரோடு மாவட்ட உள்ளாட்சி இடைத்தோதலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, இன்று 9 இடங்களில் நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் தோதலில், 20 பதவிகளுக்கு 65 பேர் போட்டியிட்டனா். கடந்த 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அம்மாபேட்டை தவிர பிற ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான வாக்குகள் உள்ள பெட்டிகள், அலுவலகக் கூட்ட அரங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதன்படி பெருந்துறை, ஈரோடு, டி.என்.பாளையம், சென்னிமலை, நம்பியூா், அந்தியூா், பவானிசாகா் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கிலும், பவானி வட்டார அளவிலான சேவை மையத்திலும், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!